Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சீமென்ஸ் நிகர லாபம் ரூ.504 கோடி

சீமென்ஸ் நிகர லாபம் ரூ.504 கோடி

உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு தொடர்வதும், தனியார் துறையின் மூலதனச் செலவு அதிகரித்ததும் ஆர்டர்களும் வருவாயும் உயர உதவியதாக சுனில் மாத்தூர் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

செப்டம்பருடன் முடிந்த இரண்டாம் காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 4.78 சதவீதம் உயர்ந்து ரூ.504 கோடியானது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.481 கோடியாக இருந்தது.

செயல்பாட்டு வருவாய் ரூ.4,900 கோடியிலிருந்து ரூ.5,734 கோடியாக உயர்ந்தது. செப்டம்பர் நிலவரப்படி, நிறுவனம் பெற்ற புதிய ஆர்டர்களின் மதிப்பு ரூ.4,519 கோடியிலிருந்து 38 சதவீதம் அதிகரித்து ரூ.6,228 கோடியை எட்டியது.

உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு தொடர்வதும், தனியார் துறையின் மூலதனச் செலவு அதிகரித்ததும் ஆர்டர்களும் வருவாயும் உயர உதவியதாக நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுனில் மாத்தூர் தெரிவித்தார். மூலப்பொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்களால் உற்பத்திச் செலவு உயர்ந்து, லாபம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி
அமீரக நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அடுத்த செய்தி
டைட்டன் துணைத் தலைவர் பதவி - நவ. 12-ல் நோயல் டாடா ஓய்வு

தொடர்புடைய செய்திகள்